விடுதிக்குள் எகிறி குதித்த இளைஞர் - 2 பெண்களை.. பதறி கத்திய மாணவிகள் - சென்னையில் பகீர் சம்பவம்

x

சென்னையில், நள்ளிரவில் பெண்கள் விடுதிக்குள் புகுந்து கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கீழ்பாக்கம் பகுதியிலுள்ள பெண்கள் விடுதிக்குள் நேற்று இரவு புகுந்த ஸ்ரீகாந்த் என்பவர், தூங்கி கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் 2 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவிகள் எழுந்து சத்தமிட்டதை தொடர்ந்து ஸ்ரீகாந்த் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின் 2 மணி நேரம் கழித்து தவறவிட்ட மொபைல் போனை எடுப்பதற்காக பெண்கள் விடுதிக்குள் மீண்டும் வந்த ஸ்ரீகாந்தை, விழித்திருந்த பெண்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் தனியார் மருத்துவமனை ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்