ஆற்றை கடக்கும் போது தவறி விழுந்த இளைஞர்.. தீவிர தேடுதல் பணியில் தீயணைப்பு படை வீரர்கள்..

x

பாபநாசம் அருகே கொள்ளிடம் ஆற்றில் சிக்கி மாயமான இளைஞரை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருவைகாவூரை சேர்ந்தவர் தினேஷ். இவர் ஐடிஐ படித்து முடித்த நிலையில், வேலைக்காக வெளிநாடு செல்ல இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கொள்ளிடம் ஆற்று அருகே மாட்டினை அழைத்து கொண்டு சென்ற தினேஷ், ஆற்றை கடக்கும் போது எதிர்பாரதவிதமாக ஆற்றில் சிக்கி மாயமாகியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தினேஷை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்