ஜெயில் சென்றும் திருந்தாத உல்லாச ராணி.. நாடி அடங்கும் வரை அடங்காத ஆத்திரம் - நடுரோட்டில் முகம் சிதைத்து கொன்ற தம்பி

x

சொல்லித் திருந்தாத தங்கையை, அண்ணனே கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம், ராமநாதபுரம் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை?..

இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது, இந்தத் தொகுப்பு......ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.காவனூர் கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா... இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், இடையர் வலசையை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார்...

இதையறிந்து ஆத்திரமடைந்த பவித்ராவின் கணவர், அவருடன் சண்டையிட்டு பிரிந்து சென்ற நிலையில், தனது தாய், தந்தையுடனே வசிக்க ஆரம்பித்திருக்கிறார் பவித்ரா...

மகளின் தவறான நடத்தையால் ஏற்கெனவே மன வேதனையில் இருந்திருக்கிறார் பவித்ராவின் தந்தை...

இந்நிலையில், கணவனை பிரிந்ததற்கும், வாழ்க்கையை தொலைத்ததற்குமான கவலை சிறிதுமின்றி மகள் தொடர்ந்து தகாத உறவில் உல்லாசமாக சுற்றி திரிந்ததை கண்டு ஆத்திரமடைந்திருக்கிறார்...

இதில், பலமுறை பவித்ராவை அழைத்து எச்சரித்தும், கண்டித்தும் வந்த நிலையில், தனது தகாத உறவுக்கு தந்தை இடையூறாக இருப்பதை எண்ணிய பவித்ரா, அவருடைய தாய் பாக்கியத்துடன் சேர்ந்தே தந்தையை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியிருக்கிறார்...

இதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் வீட்டில் இருந்த பவித்ராவின் தந்தை, அவரது மகளாலும், மனைவியாலும் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

இந்த சம்பவத்தில் தனது தாய் பாக்கியத்துடன் சேர்ந்து சிறையிலடைக்கப்பட்ட பவித்ரா, ஜாமீனில் வெளியே வந்த நிலையில், மீண்டும் ராமநாதபுரத்தை சேர்ந்த வேறோருவருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார்...

ஏற்கனவே, பவித்ராவின் நடவடிக்கை பிடிக்காமல் ஒதுங்கி இருந்த அவரது தந்தை வழி உறவினர்கள், பவித்ரா அவரது தந்தையை கொன்றதிலிருந்தே விரக்தியுடன், ஆத்திரத்திலும் பகுதியில் வலம் வந்து கொண்டிருந்தார்கள்...

இந்நிலையில், இதுவரை தகாத உறவில் இருந்து வந்தது போதாதென்று, புதிதாக ஒருவருடன் பவித்ரா தகாத உறவில் இருந்து வருவதை அறிந்த அவரது உறவினர்கள் கொதித்து போயுள்ளனர் ...

இந்த சூழலில், பவித்ராவின் சித்தப்பா மகனும், சகோதரருமான மணிகண்டன், பலமுறை பவித்ராவை சந்தித்து எச்சரித்து வந்த நிலையில், பலருடன் அவர் தகாத உறவை தொடர்ந்து வருவதை அறிந்து ஆத்திரமடைந்துள்ளார்...

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த பவித்ராவை, மணிகண்டன் வீடு புகுந்து இரும்பு ராடால் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

பவித்ராவின் அலறல் சத்தம் கேட்டு பதற்றமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில்... பவித்ராவின் கடைசி உயிர் நாடி அடங்கும் அவரை கொடூரமாக தாக்கி பழிதீர்த்து விட்டு, வெளியே வந்த மணிகண்டனை, அங்கு வந்திருந்த போலீசார் கைது செய்தனர்...

தகாத உறவு என்னும் மோக மாயையில் சிக்கி, கணவனை பிரிந்து, தந்தையை பெட்ரோல் ஊற்றி கொல்லும் வரை சென்ற மகளை, அவரது உறவினரான சகோதரனே கொலை செய்து பழிதீர்த்த சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்