அண்ணனை பார்க்க கஞ்சா சாக்லேட்டுடன் வந்த தம்பி... வட மாநில இளைஞர்களுக்கும் சப்ளை

x

கோவையில் உள்ள வட மாநில இளைஞர்களுக்கு பீகாரில் இருந்து கஞ்சா சாக்லேட்டை கடத்தி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

பீகாரை சேர்ந்தவர் இளைஞர் ராஜ்குமார் ராய். இவரது சகோதரர் கோவை, சூலூரில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், தனது சகோதரனை பார்க்க பீகாரில் இருந்து கோவை வரும் ராஜ்குமார் ராய், சகோதரனுக்காக கஞ்சா சாக்லேட் வாங்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதை, சகோதரருடன் பணிபுரியும் வடமாநில இளைஞர்களுக்கும் கொடுத்த நிலையில், தொடர்ந்து அதை வியாபாரமாகவே செய்ய ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், கோவை கண்ணம்பாளையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், இரு வடமாநில இளைஞர்களை பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது, இளைஞர்களிடம் இருந்து கஞ்சா சாக்லேட்டை கைப்பற்றிய போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜ்குமார் ராய் பீகாரில் இருந்து கஞ்சா சாக்லேட்டை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவர, ராஜ்குமார் ராயை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 2 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்த போலீசார், இளைஞர்களை சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்