வெளிய சொன்னா உங்கள...சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்

x

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இரண்டு சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். கல்லாபுரத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான 13 மற்றும் 8 வயது சிறுவர்கள், தங்களது வயலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது, கடத்தூரை சேர்ந்த ஈஸ்வரன் என்ற இளைஞர், சிறுவர்களை வீட்டில் விடுவதாக கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று, ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி அடித்துள்ளார். மேலும், வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர் புகார் அளித்த‌தால், ஈஸ்வரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்