அருவியில் திடீரென தண்ணீரில் மூழ்கிய இளைஞர்.. ஒரு நொடி கூட யோசிக்காமல் குதித்த டிரைவர் - அடுத்து நடந்த பரபரப்பு காட்சி

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கேரளம்குண்டு அருவியில் தவறி விழுந்த இளைஞர், மீட்கப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த சிலர், கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள அருவிக்கு சென்ற நிலையில், விஜேஷ் என்பவர் தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது. உடனடியாக, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், கயிறு கட்டி மீட்க முயன்றனர். இதனிடையே, தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் ஒருவர், கயிறு கட்டி கீழே இறங்கி, விஜேஷை முதுகில் சுமந்து பாத்திரமாக மீட்டார். முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

X

Thanthi TV
www.thanthitv.com