பிசுறே இல்லாமல் கச்சிதமாக நடந்த வேலை... புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய்

x

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, கடந்த ஜூன் 17ஆம் தேதி நடந்த கல்வி விருது விழாவில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு, நடிகர் விஜய் பரிசுகள் வழங்கினார். அந்த விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தியதாக, 234 தொகுதிகளில் உள்ள விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களை, நடிகர் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் அழைத்து பாராட்டினார். இந்நிலையில் கடந்த 2 நாட்களில் இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த, முந்நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட தொகுதி பொறுப்பாளர்களுடன், நடிகர் விஜய் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்