அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை... ரூ.1.22 கோடியை சுருட்டிய பைனான்சியர் - எஸ்கேப் ஆன மனைவி

கரூரை சேர்ந்த தம்பதி கிருஷ்ண மூர்த்தி மற்றும் மணிமேகலை. இருவரும் நிதி நிறுவனம் நடத்தி வந்த நிலையில், தங்களிடம் பணம் டெபாஸிட் செய்தால், அதிக வட்டி தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி, நர்மதா என்பவர் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை நிறுவனத்தில் மூதலீடு செய்துள்ளார். இதில், முதலீடு செய்த பணத்தை இருவரும் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், நர்மதா போலீசில் புகாரளித்துள்ளார். இதனடிப்படையில், விசாரணை நடத்திய போலீசாருக்கு, நிறுவனத்தில் பண முதலீடு செய்த 27 பேரிடம் சுமார் 1 கோடியே 22 லட்சம் வரையில் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், அவரது மனைவியை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com