எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை எட்டிபிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்து சாதனை பெண்மணி...

x

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை எட்டி சாதனை படைத்த முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையை முத்தமிழ் செல்வி பெற்றுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் - மூர்த்தியம்மாள் தம்பதியரின் மகள் முத்தமிழ்ச்செல்வி. திருமணத்திற்குப் பிறகு சென்னையில் கணவர் மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் முத்தமிழ்ச்செல்வி மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டவர். இவர், எவரெஸ்ட் சிகரம் ஏற நிதியுதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்ததையடுத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரூ.10 லட்சம் காசோலை வழங்கினார். பின்னர், ஏஷியன் ட்ரெக்கிங் இன்டர்நேஷனல் எனும் தனியார் நிறுவன குழுவினருடன் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி எவரெஸ்ட் சிகரம் ஏற தொடங்கிய முத்தமிழ்செல்வி, மே- 23 ஆம் தேதியுடன் 51 வது நாள் பயணத்தை கடந்து சாதனை படைத்துள்ளார். சுமார் 8 ஆயிரத்து 849 மீட்டர் தூரம் கடும் பனி மற்றும் குளிரை பொருட்படாமல் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை பகல் 12.45 மணியளவில் அடைந்ததாக, நேபாள அரசு குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்