வளர்த்த ஆட்டோடு உயிரை விட்ட பெண் - 2 நாளுக்கு பின் சடலமாக கிடைத்த சோகம் | cuddalore

x

காட்டுமன்னார்கோவில் அறுந்து கிடந்த மின்கம்பியால், மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண் 2 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருப்பூர் கிராமத்தை சேர்ந்த சரோஜா, 2 நாட்களுக்கு முன்பு ஆடு மேய்க்க சென்ற நிலையில் வீடு திரும்பாத‌தால் உறவினர்கள் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், வயல்வெளியில் துர்நாற்றம் வீசியதால், அங்கு சென்று பார்த்தனர். அப்போது, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து, சரோஜாவும், அவர் மேய்த்து வந்த ஆடும் இறந்து சடலமாக கிடந்த‌தைக் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நட்த்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்