சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண்

x

நாகையில், தனியார் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி பயின்று வந்த 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் காப்பாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மாவட்ட ஆட்சியர் வீடு அருகே உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில், சுனாமியில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் தாய் தந்தையரை இழந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி பயின்று வருகின்றனர். இங்குள்ள 12 வயது சிறுவனுக்கு, சசிகலா என்ற பெண் காப்பாளர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுவன் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்