எல்லை பிரச்னைக்கு மத்தியிலும் நடக்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. 3 கட்சிகளின் பிளான் என்ன?

x

கர்நாடகா - மகாராஷ்டிர எல்லை பிரச்சினைக்கு மத்தியில், குளிர்கால கூட்டத் தொடருக்கான கர்நாடக சட்டப்பேரவை இன்று கூடவுள்ளது.

பெலகாவி மாவட்டத்திலுள்ள சுவர்ண சவுதாவில், குளிர்கால கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடரை, இன்று முதல் டிசம்பர் 30ம் தேதி வரை பத்து நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, வாக்காளர்கள் தகவல்கள் திருட்டு, அரசு ஒப்பந்த பணிகளில் 40 சதவீத கமிஷன் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி, புயலை கிளப்ப காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. அதேபோல் தேர்தல் நெருங்குவதால், பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை இந்த கூட்டத்தொடரில் வெளியிட ஆளும் பாஜக அரசு தயாராகி வருகிறது. மொத்தத்தில், 3 முக்கிய கட்சிகளுமே, இந்த கூட்டத்தொடரை தேர்தலுக்கு எப்படி ஆதாயமாக பயன்படுத்திக் கொள்வது என்பதை மிகத் தெளிவாக திட்டமிட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்