விவாகரத்து தர மறுத்த மனைவி.. கழுத்தறுத்து கொடூரமாக கொன்ற கணவன்.. மகனையும் தாக்கிவிட்டு எஸ்கேப்

x

ஹைதராபாத் அருகே, விவாகரத்து கொடுக்க மறுத்த மனைவியின் கழுத்தை அறுத்து காவலர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூரியாபேட்டை மாவட்டம் நரசிங்கலகூடம் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர், ரங்காரெட்டி மாவட்டம் வனஸ்தலிபுரத்தில் உள்ள நீதிமன்றத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஷோபா என்ற பெண்ணுடன் திருமணமாகி, இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனிடையே, பணி முடிந்து வீட்டுக்கு வந்த ராஜ்குமார், மனைவியிடம் விவாகரத்து கேட்ட நிலையில், அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த ராஜ்குமார், கத்தியால் ஷோபாவை கடுமையாக தாக்கியதுடன் இரண்டாவது மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. மேலும், இதை தடுக்க முயன்ற மகனையும் தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், ஷோபாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஐந்து தனிப்படைகள் அமைத்து தப்பியோடிய ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்