கணவனை கதற கதற வீட்டுக்குள் பூட்டி மகனை காரில் கடத்தி சென்ற மனைவி - சென்னையில் பரபரப்பு

x

சென்னை அருகே, கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த கணவனை, வீட்டில் பூட்டிவிட்டு, மகனை தாய் தூக்கிக் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சென்னையை அடுத்த செம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஷரித் - சுபைதா பேகம் தம்பதிக்கு, 7 வயதில் மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக, தம்பதி இருவரும் கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், 7 வயது மகன் தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், ஷரித்தின் வீட்டிற்கு உறவினர்களுடன் வந்த சுபைதா பேகம், கணவர் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கணவர் விட்டு வெளியே வர முடியாத நிலையில் கதவை பூட்டிவிட்டு, தனது மகனை தூக்கிக் கொண்டு, சுபைதா காரில் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்