கணவனை கொன்று புதைத்து... சிமெண்ட் பூசி மறைத்த மனைவி..! போலீஸ் கைவிட்ட வழக்கில் திடீர் திருப்பம்..!

x

உத்தரபிரதேசத்தில் திரிஷ்யம் திரைப்பட பாணியில் நடைபெற்ற கொலை, நான்கு ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த சந்திரவீர் கடந்த 2018 ஆம் ஆண்டு மாயமான நிலையில், அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காத‌தால் போலீசார் வழக்கை கைவிட்டனர். இந்நிலையில், இதுபோன்ற அனைத்து வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க காவல்துறை உத்தரவிட்ட நிலையில், சந்திரவீர் மாயமானது குறித்து அவரது மகனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சந்திரவீரின் மனைவிக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்த‌து. இதையடுத்து, சந்திரவீர் மனைவி மற்றும் பக்கத்து வீட்டுகார‌ரான அனில் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கடந்த 2018ஆம் ஆண்டு சந்திரவீரை அனில் குமார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, தனது வீட்டில் புதைத்து, அதன் மீது சிமெண்ட் தளம் அமைத்த‌தாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, அனில் குமார் வீட்டில் இருந்து சந்திரவீர் உடல் பாகங்களை மீட்ட போலீசார், சவிதா மற்றும் அவரது காதலன் அருண் குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்