விபத்தில் உயிரிழந்த கணவனின் முகத்தை கூட பார்க்க விடாமல் விரட்டியடிக்கப்பட்ட மனைவி

x

வாகன விபத்தில் உயிரிழந்த கணவரின் முகத்தை பார்க்க விடாமல் மனைவி விரட்டியடிக்கப்பட்ட சோகம் கடலூரில் அரங்கேறியுள்ளது.

கடலூர் அருகே கார்கூடல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மனைவி சரண்யா. இருவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், குடும்ப தகராறு காரணமாக ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இதில், சாலை விபத்தில் சிக்கி ராஜசேகர் உயிரிழந்த நிலையில், அவருடைய வீட்டில் வைத்து இறுதி சடங்குகள் நடத்தப்பட்டுள்ளது. அப்ப்போது, கணவர் உயிரிழந்ததை அறிந்து சோகத்தில் மூழ்கிய ராஜசேகரின் மனைவி சரண்யா, அவருடைய உறவினர்களுடன் சேர்ந்து கணவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு, கணவரின் முகத்தை காட்ட மறுத்த உறவினர்கள், சரண்யாவையும் அவரது தரப்பினரையும் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென கூறி உறவினர்களுடன் மனைவி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்