அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த வேல்ஸ் அணி.. டிராவில் முடிந்த முக்கிய ஆட்டம்!

x

சர்வதேச கால்பந்து உலகக்கோப்பை தொடர்... அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த வேல்ஸ் அணி.. டிராவில் முடிந்த முக்கிய ஆட்டம்!

கால்பந்து உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா, வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் சுற்றுப் போட்டி சமனில் முடிவடைந்தது. கத்தார் அல் ரயான் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியின் 36வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் டிமோத்தி வே கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அமெரிக்கா 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து 2வது பாதியின் 82வது நிமிடத்தில் வேல்ஸ் அணி வீரர் கரெத் பேல், பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். தொடர்ந்து இரு அணியினரும் கோல் அடிக்காத நிலையில், 1க்கு 1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிரா ஆனது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்