மர்ம நபர்களால் வெடித்த வன்முறை.. பல்கலைக்கழகம் இன்று மூடல்! தீப்பற்றி எரிந்த கார், பைக்கள்

x

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், அலகாபாத் பல்கலைக்கழகத்தில், ஏற்பட்ட வன்முறை காரணமாக, பல்கலைக்கழகம் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அலகாபாத் பல்கலைக்கழகத்தில், கட்டுப்பாட்டை மீறி வளாகத்திற்குள் நுழைய முயன்ற மாணவர் தலைவருக்கும், பாதுகாவலர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு வன்முறை வெடித்த‌து. கார்கள், சேதப்படுத்தப்பட்டு, இருசக்கர வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. பலர் காயமடைந்ததால், பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டதை அடுத்து நிலைமை கட்டுக்குள் வந்த‌து. இந்நிலையில், அலகாபாத் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரியாத நபர்கள் பல்கலைக்கழக வாயில்களின் பூட்டை உடைத்து திறந்ததாகவும், அதனால், அவர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, அலகாபாத் பல்கலைக்கழகம் இன்று மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்