கிராமமே பாயாசத்தில் விஷம் கலந்து குடிக்க முயன்றதால் பரபரப்பு - தருமபுரியில் அதிர்ச்சி

x

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே கோயில் கும்பாபிஷேகம் நின்றதால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில், பொது மக்களிடம் காவல், வருவாய்த் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பாப்பிரெட்டிபட்டியை அடுத்த வேப்பமரத்தூர் கிராமத்தில் கோயில் கும்பாபிஷேக விழாவில் தனி நபருக்கும், கிராம மக்களுக்கும் இடையே இருந்த முரண்பாட்டால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கும்பாபிஷேகத்தை நிறுத்தினர். இதனால் மனமுடைந்த கிராம மக்கள், பாயாசத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தர்மபுரி வட்டாட்சியர் ஜெயசெல்வம், அரூர் பொறுப்பு டிஎஸ்பி நாகலிங்கம், பொம்மிடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி உள்ளிட்டோர் காலை முதல் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில், கிராம மக்களும் தனி நபர் குடும்பத்தினரும் கோயிலில் வழிபடுவதற்கு அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, கும்பாபிஷேக பணிகளை தொடங்கி நடத்திக் கொள்ளலாம் என்று கிராம மக்களிடம் காவல் துறையினர் அனுமதி வழங்கினர். இருப்பினும் அந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்