"எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி நான் கூறிய வீடியோ..." பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா பேட்டி

x

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற பாராளுமன்ற பூத் கமிட்டி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றார்.

தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜே.பி நட்டா, காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர், புனித மண்ணிற்கு வந்தது சக்தியை கொடுப்பதாக கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முன்னேற்றத்திற்காக அதிகமான தொகையை ஒதுக்கி வளர்ச்சி பாதைக்கு செல்ல உதவுவதாகவும் கூறினார்.

ஆனால், திமுக அரசு எதையும் புரிந்து கொள்ளாதது வருத்தம் அளிப்பதாகவும், பாஜக தமிழ்நாட்டில் கால் ஊன்றும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தாம் கூறியதை சிலர் புரிந்து கொள்ளவில்லை என்றும் படித்தவர்களை அரசியல் தலைவர்களாக தமிழக மக்கள் ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்