திமுக எம்.பி கனிமொழி சோமு - க்கு சர்ப்ரைஸ் கொடுத்த குடியரசு துணை தலைவர்

x

திமுக எம்.பி கனிமொழி சோமு தனது பிறந்த நாளை துணை குடியரசு தலைவர் முன்னிலையில் கொண்டாடினார். அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் டெல்லியில் இரவு எம்.பி.க்களுக்கு பிரத்யேக விருந்தளித்ததாகவும், அன்றே தனது பிறந்த நாள் என்பதை அறிந்து கேக் வெட்டி கொண்டாட ஏற்பாடு செய்ததாகவும் கூறியுள்ளார். இதில், மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக எம்.பி கனிமொழி சோமு, முதலமைச்சர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்தும் பெற்றார்


Next Story

மேலும் செய்திகள்