நேருக்கு நேர் மோதிக்கொண்ட டூவீலர்.. தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்! ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை!

x

நேருக்கு நேர் மோதிக்கொண்ட டூவீலர்.. தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்! ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், இருவர் படுகாயமடைந்தனர். செட்டியப்பணுர் கூட்டு சாலையில், இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், சின்னகல்லுபள்ளியைச் சேர்ந்த பிரித்திவிராஜ், பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த செல்வா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு, வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்