மூவர்ணக் கொடி, பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட சீர்வரிசை... திரும்பி பார்க்க வைத்த தாய் மாமன் செயல்

x

மூவர்ணக் கொடி, பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட சீர்வரிசை... திரும்பி பார்க்க வைத்த தாய் மாமன் செயல்


தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் மூவர்ணக் கொடி மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட லாரியில் தாய் மாமன் சீர்வரிசை கொண்டு வந்த சம்பவம் மக்களிடையே பேசப்படுகிறது. குமார் என்பவரது மகளான ஹன்சிகாவிற்கு நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில், விழாவிற்கு திடீரென 100 வாகனங்கள் புடைசூழ ஒரு லாரி ஒன்று வந்தது. தேசியக்கொடி மற்றும் மூவர்ண பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த லாரியை சுதந்திர தின அணிவகுப்பு என்று நினைத்து அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையில், அந்த லாரியில் ஹன்சிகாவின் தாய் மாமன், சீர்வரிசைகளை கொண்டு வந்தது மக்களை கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்