சபரிமலையை விட்டு வைக்காத கனமழை வெள்ளத்தோடு சென்ற காணிக்கை பணம்...

x

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய பணம் மழைநீரில் நனைந்தது. ஐயப்பன் கோவில் நடை, ஆடிமாத பூஜைக்காக 17-ஆம் தேதி மாலை திறக்கப்பட்டு, நேற்று காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலையில் பலத்த மழை பெய்ததால், பக்தர்கள் காணிக்கை பணம் கொண்டு செல்லும் கன்வேயர் மழைநீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தில் ஏராளமானவை, தண்ணீரில் நனைந்து நாசமானதாக தெரிகிறது. அதே நேரத்தில் நனைந்த பணத்தை உலர வைக்கும் பணியும், பணம் வைக்கப்பட்டிருந்த பகுதியில் தேங்கியிருக்கும் மோட்டார் பம்ப் மூலம் அகற்றும் பணியும் நடந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்