மின்னல் வேகத்தில் பறந்த ரயில்...பாய்ந்து வந்த மர்ம பொருள் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

x

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பிரதமர் மோடியால், கடந்த வாரம், கோரக்பூர்- லக்னோ இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. அயோத்தி சோஹாவால் பகுதியில் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் 2 பெட்டிகளில் ஜன்னல் கண்ணாடி சேதம் அடைந்தது. இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 9 ஆடுகள் மீது மோதியதால் வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, ரயில் மீது தாக்குதல் நடத்திய நன்ஹூ பஸ்வான், அவரது மகன்கள் அஜய், விஜய் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்