நடுவழியில் நின்ற ரயில்.. கீழே இறங்கி தள்ளிய பயணிகள்? - வைரலான வீடியோ.. நடந்தது என்ன?

x

நடு வழியில் ரயில் நின்றதால் மக்கள் கீழே இறங்கி, ஒன்று சேர்ந்து ரயிலை தள்ளியதாக இன்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது. உண்மையிலேயே இந்த சம்பவத்தில் நடந்தது என்ன? என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சமூக வலைதளத்தில் இன்று அதிகம் பகிரப்பட்ட வீடியோ இதுதான். நடுவழியில் ரயில் நிற்க... ரயிலில் இருந்த ராணுவ வீரர்கள் மற்றும் மக்கள் ஒன்று சேர்ந்து ரயிலை தள்ளியதால் மீண்டும் ரயில் ஸ்டார்ட் ஆகிறது... சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலானது.

இப்படி காமெடியாக இந்த வீடியோ ஒருபுறம் பகிரப்பட... இன்னொரு புறம் உண்மையிலேயே நடந்தது என்ன ? என்ற தகவல் வெளியாகி... நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஆம்... நாம் இந்த வீடியோவில் பார்ப்பது கடந்த வெள்ளிக்கிழமை அன்று தீ விபத்தில் சிக்கிய ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலின் வீடியோ தான்.

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் நோக்கி வந்து கொண்டிருந்தபோது... திடீரென ரயில் தீப்பிடித்தது ஆறு பெட்டிகள் கருகியதாக கடந்த சனிக்கிழமை அன்று செய்தி வெளியாகியிருந்ததே.. அந்த ரயிலின் காட்சிகள் தான் இவை.

ரயிலில் தீ பிடித்ததை அடுத்து... அபாய சங்கலியை பிடித்து ரயிலை நிறுத்திய மக்கள், தீ அடுத்தடுத்த பெட்டிக்கு பரவுவதை பார்த்து... அதனை தடுப்பதற்காக, இன்னொரு என்ஜின் வரும் வரை பொறுத்து இருக்காமல்... மக்களுக்காக மக்களே இறங்கி... அடுத்த பெட்டியில் தீ பரவாமல் இருக்க ரயில் பெட்டியை பிரிக்க கீழே இறங்கி தள்ளிய காட்சி தான் இது.

ஆனால் இந்த உண்மை தெரியாமல்..... ரயில் ஓடாமல் நின்றதால் மக்கள் கீழே இறங்கி தள்ளியதாக... தவறாக இந்த செய்தியை இணையத்தில் சிலர் பரப்பியதால்... பெரும் விவாதத்திற்கு உள்ளாகியது, இந்த விவகாரம்.

இதை அடுத்து இந்திய ரயில்வேத்துறை தரப்பில், உரிய விளக்கம் அளிக்கப்பட்ட பிறகே... இந்த உண்மையை பலரும் தற்போது அறிந்து கொண்டிருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்