சென்னை மக்களுக்கு பேட் நியூஸ்..7 மாதம் இந்த Stop-ல் பறக்கும் ரயில் ரத்து

x

ஜூலை 1ம் தேதி முதல் 2024 ஜன.31ம் தேதி வரை கடற்கரை-சேப்பாக்கம் பறக்கும் ரயில் சேவை ரத்து

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 3 ரெயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு பாதையில் விரைவு ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனவே கூட்டத்தை குறைக்க தாம்பரத்தில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையம் வழியாக வடமாநிலங்களுக்கு ரெயில்களை இயக்க புதிய பாதை தேவைப்படுகிறது. எனவே சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4.3 கீ.மீ தொலைவுக்கு 4-வது புதிய ரெயில்பாதை அமைக்க ரெயில்வே வாரியத்துக்கு, தெற்கு ரெயில்வே பரிந்துரை செய்தது. இந்த நிலையில் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.இந்த நிலையில் 4-வது வழித்தட பணிகளுக்காக சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவை வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்