மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரீத முடிவு தாயால் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்

x

விருதுநகர் அருகே பி. குமாரலிங்கபுரத்தில் சரவணகுமார் - பெத்தம்மாள் தம்பதிக்கு, 6 வயதில் பாண்டிச்செல்வி மற்றும் 2 வயதில் கார்த்தியாயினி என 2 பெண் குழந்தைகள் இருந்தன. கடந்த 2 ஆண்டுகளாக பெத்தம்மாள் மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம்போல் கணவர் சரவணக்குமார், கொத்தனார் வேலைக்கு சென்றுவிட்டு மதிய உணவு அருந்த வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்ததால், சந்தேகமடைந்த அவர், பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி பெத்தம்மாள் மற்றும் 2 பிள்ளைகளும் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டு சரவணகுமார் அதிர்ச்சி அடைந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்