தீக்குச்சி கழிவுகளை எரித்த போது தொழிலாளிக்கு நடந்த சோகம்

• விருதுநகர் அருகே தீப்பெட்டி ஆலையில் இருந்த தீக்குச்சி கழிவுகளை குழி வெட்டி எரித்த போது, அந்த குழிக்குள் விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். • பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான அந்த ஆலையில், 30க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். • இந்நிலையில், கூத்திப்பாறையைச் சேர்ந்த முருகேசன் என்ற தொழிலாளி, தீப்பெட்டி ஆலையின் தீக்குச்சி கழிவுகளை குழி வெட்டி எரித்துள்ளார். • அப்போது, அவர் எதிர்பாராத விதமாக அதே குழிக்குள் விழுந்து கூச்சலிட்டுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தீ காயங்களுடன் மீட்டனர். • ஆனால், சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com