ஈஸ்டர் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சோகம்..

x

கன்னியாகுமரியில், மரத்தில் கார் மோதி இருவர் உயிரிழந்த நிலையில், விபத்து குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. களியக்காவிளை அருகே கண்ணுமாமூடு பகுதியை சேர்ந்த, ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி தலைமை

ஆசிரியர் ரசைலையன், குடும்பத்துடன் தாம்பரத்தில் வசித்து வந்தார். ஈஸ்டர் பண்டிகைக்காக மனைவி, மகன் அருண்சேம் உட்பட குடும்பத்தினருடன், காரில் சொந்த ஊர் புறப்பட்டார்.

நள்ளிரவில் இரணியல் அருகே சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இதில் ரசைலையன், அருண்சேம் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில், கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்