கணவன் சுட்டி காட்டிய அந்த விசயம்... உடனே உயிரை விட்ட மனைவி... விபரீதத்தில் முடிந்த சண்டை

x

சிவகங்கையில் அடிக்கடி செல்போன் பேசுவதாக கூறி கணவன் சண்டையிட்டதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டம் கடிக்குளம் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சர்மிளா என்பவரும் காதலித்து வந்த நிலையில் வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வாடிப்பட்டி அருகே தனியே வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், இருவருக்குமிடையே சில நாட்களாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சர்மிளா அதிக நேரம் செல்போனில் பேசுவதை சுட்டி காட்டிய அஜித்குமார், தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது . இதனை தொடர்ந்து சர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மனமுடைந்த அஜித்குமார் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பானது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்