வசமாய் சிக்கிய பலநாள் திருடன்..! - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்

வசமாய் சிக்கிய பலநாள் திருடன்..! - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில், தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார்,

சீனிவாசன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 40 ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு சவரன் நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com