தீபாவளி கொண்டாட டீக்கடையில் திருடிய திருடன் - டீ மாஸ்டர் அசந்த நேரத்தில் கொள்ளை

x

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே பேக்கரியில் பணம் திருடி சிசிடிவியால் வசமாக சிக்கிய இளைஞர், தீபாவளிக்காக திருடியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்... தீவட்டிப்பட்டியில் உள்ள பேக்கரியில் ராஜா என்பவர் டீ மாஸ்டராக உள்ளார்... கடந்த வாரம் இரவு வாடிக்கையாளருக்கு டீ போட்டு கொடுத்து விட்டு கல்லாவைப் பார்த்த போது 2 ஆயிரத்து 500 ரூபாய் கொள்ளை போயிருந்தது... சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, ஒரு கேமராவை ஆஃப் செய்து விட்டு கல்லாவில் இருந்து பணத்தை திருடிச் சென்ற நாச்சனம்பட்டி காலனியை சேர்ந்த வீராசாமி என்பவரை கைது செய்தனர்... காவல்துறை நடத்திய விசாரணையில், வீராசாமி தீபாவளிக்காக புது உடைகள், பட்டாசு வாங்க திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்