அரசுக்கு சொந்தமான ரூ.58 லட்சம் திருட்டு....வனவர் பணியிடை நீக்கம் - அதிகாரிகள் அதிரடி

x

கோவையில் அரசுக்கு சொந்தமான 58 லட்ச ரூபாய் பணத்தை போலி ரசீது மூலம் வனத்துறையினர் திருடியது அம்பலமான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

போலாம்பட்டி வனச்சரக அலுவலர் சரவணன், வனவர் ராஜேஷ்குமார் ஆகியோர் கடந்த ஓராண்டாக கோவை குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு சீட்டு வழங்குவதில் முறைகேடு செய்ததாக புகார்கள் எழுந்தன. அதன்படி போலியாக ரசீது தயாரித்து 58 லட்ச ரூபாய் மோசடி செய்தது தெரியவந்த நிலையில் வனவர் ராஜேஷ்குமார் 35 லட்ச ரூபாய் பணத்தை சுற்றுலா குழு கணக்கில் டெபாசிட் செய்தார். இதனிடையே வனவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் வனச்சரக அலுவலர் மதுரை வன மண்டலத்தில் பணிபுரிவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்