கடலில் குளித்த மாணவர்கள்... திடீரென்று உள்ளே இழுத்துச் சென்ற ராட்சஸ அலை... வெளியான பரபரப்பு காட்சி

x

புதுவையில் ராட்சத அலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட டெல்லி ஐஐடி மாணவர்கள் இருவர் பத்திரமாக மீட்கப்பட்டனர். புதுச்சேரி கடற்கரையைச் சுற்றிப் பார்க்க வந்த 4 மாணவ மாணவிகள் காந்தி சிலை பின்புறம் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத அலை ஒன்று மேலெழும்பி, ஹர்சித்சிங், ஆரியாரே ஆகிய 2 மாணவர்களை அப்படியே கடலுக்குள் வாறிக் கொண்டது... மீதமிருந்த மாணவர்கள் கத்திக் கூச்சலிட்டு கரையில் இருந்தவர்களின் உதவியை நாடினர். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், ஒரு வெளிநாட்டவர் மற்றும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆகியோர், தண்ணீரில் தத்தளித்த 2 மாணவர்களை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்