கட்டிப் பிடித்த அடுத்த நொடியே.. தோழியை சுட்டு கொன்ற மாணவன்! - அதன் பிறகு ஹாஸ்டலில் நடந்த பயங்கரம்

x

கான்பூரைச் சேர்ந்த 21 வயது மாணவியை அம்ரோஹாவைச் சேர்ந்த பிஏ 3ம் ஆண்டு படிக்கும் அனுஜ் சிங் என்ற மாணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். 2 பேரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள் என கூறப்படும் நிலையில், ஒருவேளை காதல் பிரச்சினையாக இருக்குமோ எனவும், அந்த மாணவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் உணவு அறைக்கு வெளியே இருவரும் சந்தித்துக் கொண்ட நிலையில், அங்கு அவர்கள் பேசுவதையும், கட்டிப்பிடிப்பதையும் பார்த்ததாக சில மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அனுஜ் அந்த மாணவியை சுட்டு விட்டு ஆண்கள் விடுதியில் உள்ள தனது அறைக்கு விரைந்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியும் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்