வானில் பெருகும் செயற்கை வெளிச்சம் - மாயமாகும் நட்சத்திரங்கள்

ஒளி மாசுவால் வானில் உள்ள நட்சத்திரங்கள் படிப்படியாக மறைந்து வருவதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித் துள்ளது. அது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...
x

உலக அளவில், குறிப்பிட்ட ஒரு பகுதியின் இரவுநேர வான் வெளிச்சம் அதிகரித்தபடி இருக்கிறது. மனிதர்களால் உருவாக்கப்படும் இந்த செயற்கை ஒளிப் பெருக்கத்தை, பாதகம் தரக்கூடிய ஒளிமாசு என்கிறார்கள், சுற்றுச்சூழல் அறிவியலாளர்கள்.

கட்டடங்கள், சாலைகள், மற்ற குறிப்பிட்ட நிலப்பகுதிகள், விளம்பரப் பலகைகள், பதாகைகள் உள்ளிட்டவைகளில் வைக்கப்படும் விளக்குகளால், அளவுக்கு அதிகமான செயற்கை ஒளி உமிழப்படுகிறது.

மிகையான இந்த ஒளியானது, ஒளிச்சிதறல் காரணமாக, அந்தந்தப் பகுதிகளின் வான் பரப்பில், வியாபித்தபடி இருக்கிறது. இந்த ஒளிமாசுபாட்டால் பல்வேறு சுற்றுச்சூழல் கேடுகள் ஏற்படுவது ஒரு பக்கம் என்றால், வானத்தில் உள்ள நட்சத் திரங்களையும் மனிதர்கள் பார்க்கமுடியாத சூழ்நிலை உருவாகி வருகிறது.

இதுகுறித்து, கடந்த 10 ஆண்டுகளாக உலகின் பல பகுதிகளில் 51ஆயிரத்து 300 பேரிடம் ஆய்வு மேற்கொண்ட அமெரிக்காவின் சைன்ஸ் ஆய்விதழ், இது குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், ஆண்டுக்கு ஏழு முதல் பத்து சதவீதம்வரை ஒளிமாசு உண்டாகியிருக்கிறது என்றும், எட்டு ஆண்டுகளில் வான் வெளிச்சம் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஒளிமாசு ஏற்படாத தொலைதூர கிராம, மலைப் பகுதிகளில் நன்கு பார்க்கக்கூடிய நட்சத்திரங்களை, ஒளிமாசு உள்ள பகுதிகளில் பார்க்கமுடிவதில்லை.

இந்த ஆய்வின் படி, இப்போதைய குழந்தைகள் 250 நட்சத்திரங்களைப் பார்க்கமுடிகிறது என வைத்துக் கொண்டால்18 ஆண்டுகளில் வெறும் நூறு நட்சத்திரங்களை மட்டுமே பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே ஒளிமாசு அதிகரித்து வருவதாகவும், அதன் பாதகத்தை அறிந்தும், சமூக அளவில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பது, நிலைமையை இன்னும் மோசமாக்கும் எனவும் எச்சரிக்கிறார், ஆய்வுக்குத் தலைமைவகித்த ஜெர்மன் விஞ்ஞானி கிறிஸ்டோபர் கைபா.


Next Story

மேலும் செய்திகள்