லோகேஷ் கனகராஜ் பற்றவைத்த திரி..சரவெடியாய் வெடிக்க களமிறங்கிய பிரம்மாண்டங்கள் ....தளபதி - 67 அதிகார பூர்வ அப்டேட்..

x

தளபதி 67 படத்தில் இணைந்தது குறித்து மனம் திறந்துள்ள மிஷ்கின், 21 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்த படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியதாகவும், ஆனால் இத்தனை ஆண்டுகளாக எங்கள் இருவரது உறவில் எந்த மாற்றமும் இல்லை என நெகிழ்ந்துள்ளார். இதோடு, இயக்குநர் லோகேஷ் மீதான தனது அன்பும் மரியாதையும் தன்னை உற்சாகப்படுத்துவதாக மிஷ்கின் மகிழ்ந்துள்ளார்

கே.ஜி.எஃப் 2 படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள சஞ்சய்தத், தற்போது தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார். படத்தின் ஒன்-லைனை கேட்டவுடனே நடிக்க உறுதி செய்ததாக குறிப்பிட்டுள்ள சஞ்சய் தத், மிகுந்த மகிழ்ச்சியுடன் தளபதி 67 படத்தின் பயணத்தை தொடங்குவதாக நெகிழ்ந்துள்ளார்.

தளபதி 67 படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் இணைந்துள்ளார். தான் இயக்கிய கைதி படத்தை மன்சூர் அலிகானை வைத்து இயக்க திட்டமிட்டிருந்தேன் என கூறிய லோகேஷ் கனகராஜ், தான் மன்சூர் அலிகானின் ரசிகன் எனவும், நிச்சயம் அவரை தனது படத்தில் நடிக்க வைப்பேன் என கூறியிருந்தார். தற்போது தளபதி 67 படத்தில் அதனை நிறைவேற்றி விட்டார். மன்சூர் அலிகானும், லோகேஷ் நீ ஆர்ப்பரித்து எழு என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தளபதி 67 படத்தில் நடிப்பது மகிழ்ச்சி என இயக்குநர் கவுதம் மேனன் நெகிழ்ந்துள்ளார். இதேபோல பிரபல நடன ஆசிரியரான சாண்டி, நடிகை பிரியா ஆனந்த் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மலையாளத்தில் மிகவும் பிரபல நடிகரான மேத்யூ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்