"தம்பி இதெல்லாம் வேணாம் பா" Advice செய்த தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்

x

திருப்புவனம் புதூரைச் சேர்ந்த போஸ் என்பவரது மகன் பாரதிராஜா. மது பழக்கத்திற்கு அடிமையாகிய பாரதிராஜா, அதிலிருந்து மீண்டு வருவதற்காக 6 மாதத்திற்கு முன்பு போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை முடிந்த பிறகு வீட்டிற்கு திரும்பிய அவர், மீண்டும் மது குடிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் பாரதிராஜாவுக்கும், அவரது தந்தை ஆறுமுகத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் பாரதிராஜா மது குடித்துவிட்டு வீட்டுக்கு வரவே, அதனை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாரதிராஜா, தந்தை என்றும் பாராமல், அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாரதிராஜாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்