தாயை அடக்கம் செய்த மகன்.. திடீரென உயிருடன் திரும்பியதால் அதிர்ச்சி - சென்னை அருகே இப்படி ஒரு சம்பவமா?

x

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உடல் சிதறிய நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டியின் சடலம் அடையாளம் காணப்பட்டது.

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கடந்த 24 ஆம் தேதி மூதாட்டி ஒருவர் உடல் சிதறிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கோபித்துக் கொண்டு சென்ற, திருவள்ளூர் அடுத்த சேலை கண்டிகை கிராமத்தை சேர்ந்த சொக்கம்மாள் எனக் கூறி அவரது மகன் உடலை பெற்றுக்கொண்டார். உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், திடீரென சில நாட்கள் கழித்து சொக்கம்மாள் வீடு திரும்பியதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மகன் போலீசில் புகாரளித்தார். உடனே, தீவிர விசாரணை நடத்திய போலீசாருக்கு, செங்குன்றம் அடுத்த புதுநகரை சேர்ந்த சகுந்தலா என்பவர் ரயில் நிலையம் அருகேயுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றபோது மாயமானது தெரியவந்தது. இந்நிலையில், சகுந்தலாவின் உறவினர்களை அழைத்து, வட்டாட்சியர் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்ட உடலை அதிகாரிகள் தோண்டி எடுத்தனர். அப்போது, உடலில் இருந்த மச்சம் மற்றும் பச்சை குத்து முதலிய அடையாளங்களை வைத்து சகுந்தலா தான் என உறவினர்கள் உறுதி செய்த நிலையில், அதிகாரிகள் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சகுந்தலா உயிரிழந்த மர்மம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்