பெற்ற தாயை கொடுமைப்படுத்திய மகன்..மனமுடைந்த தந்தை காவல் ஆணையத்தில் புகார்.காவல் ஆணையர் அதிரடி முடிவு

x

சென்னை கோயம்பேட்டை 81 வயதாகும் ராதாகிருஷ்ணன், தனது மனைவி வசந்தியை, மகன் சதீஷ் கொடுமைப்படுத்துவதாகவும், இதுகுறித்து தீர்வு காண வேண்டும் என்றும், பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு ஈமெயில் மூலம் புகார் அனுப்பினார். மனுவை பார்த்த ஆணையர், பிரச்னை குறித்து துணை ஆணையர் குமாரை நேரில் சென்று விசாரித்து தீர்வு காண அறிவுறுத்தினார். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு துணை ஆணையர் குமார் நேரில் சென்று விசாரித்தார். கோயம்பேட்டில் இருந்த தனது பழக்கடையின் ஆவணங்களைக் கொண்டு தனது மகன் சதீஷ் நிதி நிறுவனத்தில் 25 லட்சம் ரூபாய் கடன் பெற்றது தெரியவந்தது. பணத்தை செலுத்த முடியாததால், கடையை ஏலம் விடும் நிலைக்கு சென்று, பின்னர் மீதமுள்ள 24 லட்சம் ரூபாயை ராதாகிருஷ்ணனே மொத்தமாக செலுத்தியுள்ளார். இதுகுறித்த ஆவணங்களை நிதி நிறுவனத்திடம் இருந்து சதீஷ் வாங்காமல் இருந்து வந்த நிலையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அந்த ஆவணங்கள் ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்