அடுத்த மாதம் தொடங்கும் 'தலைவர் 170' படப்பிடிப்பு - தரமான அப்டேட் கொடுத்த படக்குழு

'தலைவர் 170' படக்குழு படப்பிடிப்புக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர், லால் சலாம் படங்களை தொடர்ந்து டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். போலி என்கவுன்ட்டரை மையமாக கொண்டு, உண்மை கதை அடிப்படையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கன்னியாகுமரி மற்றும் கேரள எல்லையில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com