நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் பட்டாசு துகளால் பறிப்போன பார்வை மதுரையில் பயங்கரம்...

x

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், பட்டாசு வெடித்து முதியவர் கண்பார்வை இழந்ததால், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரையூர் சாலையில், தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்காக, சிலர் பட்டாசு வெடித்தனர். அப்போது, அவ்வழியாக ஆட்டோவில் சென்ற பெருமாள்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவரின் கண்ணில் பட்டாசுத் துகள்கள் பட்டு, பார்வை இழந்தார். காயம்பட்ட கண்ணுக்கு செல்லும் நரம்புகள் செயலிழந்ததால் கண் தெரிய வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இழப்பீடு வழங்கக்கோரியும், முதியவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்