ரயில் விபத்து நடுவே நடந்த அதிர்ச்சி.. 1 நொடியில் தகர்ந்த ரூ.1,710 கோடி - கங்கை பாலம் இடிந்ததா? இடிக்கப்பட்டதா?

x

பீகாரில் 1710 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் நொடிப் பொழுதில் சரிந்து விழுந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. , இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? என்பதை அலசுகிறது இந்த தொகுப்பு.


ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் கூட அப்படியே நிற்கிறது... இதுதானா உங்க தரம்' என சமூக வலைத்தளத்தில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது, பீகார் பாலம் இடிந்து விழுந்த சம்பவம்.

இப்படி சீட்டுக்கட்டை போல் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் இடிந்து விழுந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் சுமார் 1710 கோடி ரூபாய் செலவில் கங்கை நதியின் நடுவே கட்டப்பட்டு வந்தது.

பீகார் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுவது ஒன்றும் புதிதல்ல... இங்கு கடந்த ஆண்டு மட்டும் ஏழு பாலங்கள்

இவ்வாறு இடிந்து விழுந்தன. இதில் நான்கு பாலங்கள் கட்டிக் கொண்டிருக்கும் போதே இடிந்து விழுந்தது... கட்டுமானத்தின் தரத்தை தொடர்ந்து கேள்விக்குறியாக்கி வந்தன.

தற்போது பாகல்பூரில் இடிந்து விழுந்துள்ள இந்த பாலத்தின் ஒரு பகுதி சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் இடிந்து விழுந்திருந்தது. அப்போது புயல் மற்றும் மழையை காரணம் சொல்லப்பட்ட, தற்போது மீண்டும் பாலம் உடைந்திருப்பது பீகார் அரசியலில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

நிதீஷ் குமாரின் ஆட்சியில் நடைபெறும் ஊழலை இது வெளிச்சம் போட்டு காட்டி இருப்பதாக எதிர்க்கட்சியான பாஜக விளாசி வர... பாலத்தின் கட்டுமானம் மூன்று பாஜக எம்எல்ஏக்களின் ஆட்சி காலத்தில் தான் கட்டப்பட்டது என பதிலுக்கு நிதிஷ்குமார் கட்சி குற்றம் சாட்டியது.

ஆனால் தற்போது பாலம் தானாக இடிந்து விழவில்லை... கடந்த ஆண்டு இந்த பாலம் இடிந்து விழுந்ததால் பாலத்தின் கட்டுமானம் தொடர்பாக ஐஐடி நிபுணர் குழு அளித்த அறிக்கையின் படி, பாலத்தை இடித்து தள்ள முடிவு செய்யப்பட்டு ஞாயிறன்று இடிக்கப்பட்டதாக பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விரைவில் பாலத்தை கட்ட ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறிய நிலையில், இந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவம் கட்டுமான நிறுவனமான எஸ்.பி. சிங்கிளாவிற்கு பெருத்த அடியை ஏற்படுத்தி உள்ளது.

சிறந்த கட்டுமானத்திற்காக தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்திடமிருந்து விருது பெற்ற இந்த புகழ்பெற்ற கட்டுமான நிறுவனம் மீது தற்போது களங்கம் ஏற்பட்டுள்ளது.

அதோடு, பாலம் இடிக்கப்பட்ட போது கட்டுமான நிறுவனத்தின் காவலாளி அங்கிருந்ததாகவும் அவரை தற்போது காணவில்லை என்றும் கூறப்படுவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்