எகிப்தில் செங்கடலில் குளித்த ரஷ்ய இளைஞரை சுறா மீன் கடித்து குதறிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடலில் நீந்திய இளைஞரை சுறா மீன் பிடிக்க முயற்சி செய்யும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆபத்தை அறிந்த இளைஞர் அவரது தந்தையை உதவியை அழைக்கும் அதேவேளையில், சுறா மீன் அவரை சாப்பிடும் பயங்கரமும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மீட்பு குழு அங்கு விரைந்து சென்றும் இளைஞரை காப்பாற்றமுடியவில்லை எனவும் இளைஞரை சாப்பிட்ட சுறா மீன் பிடிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.