"ஓ இதுதான் விஷயமா? ".. எவரெஸ்ட் ஏறிய சாதனை இளைஞர் ராஜசேகர் கொடுத்த சீக்ரெட் டிப்ஸ்
இளைஞர்கள் செல்போனில் விளையாடாமல் ரியலாக விளையாடினால் எதையும் சாதிக்கலாம் என எவரெஸ்ட் ஏறி சாதனை படைத்த இளைஞர் ராஜசேகர் தெரிவித்துள்ளார். கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் என்ற இளைஞர், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி கடந்த 19ஆம் தேதி சாதனை படைத்தார். இந்நிலையில், சென்னை விமான நிலையம் வந்த வந்த ராஜசேகரை அவரது குடும்பத்தினர் உட்பட ஏராளமானோர் வாழ்த்து கூறி வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயத்துடன் தொடங்கிய பயணம் வெற்றிகரமாக முடிந்து என்றார். கிராமங்களை சேர்ந்த இளைஞர்களை தேர்ந்தெடுத்து வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற ராஜசேகர், முயற்சியோடு விடா முயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று கூறினார்.
Next Story