பள்ளிக்குள் மாணவர்கள் கண் முன்னே ஹெட் மாஸ்டரை தாக்கிய தாளாளர் - தீயாய் பரவிய வீடியோவால் பள்ளிக்கு சீல்

x

தேனியில் பள்ளியின் தலைமை ஆசிரியரை தாளாளர் தாக்கிய விவகாரத்தில், அரசு உதவி பெறும் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தேனியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான மகாராஜா தொடக்கப்பள்ளியில், பள்ளியின் தாளாளர் அன்பழகன், தலைமை ஆசிரியரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடத்திய விசாரணையில், பள்ளி அங்கீகாரம் இல்லாத மனையில் செயல்பட்டு வந்ததும், மாணவர்களின் நலன் முற்றிலுமாக பாதிக்கப்படும் வகையில் பள்ளியின் செயல்பாடுகள் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்