இணையத்தை ஆளும் 'ராக்ஸ்டார்'.... அடுத்தடுத்து ஹிட்ஸை தரும் அனிருத்

x

அடுத்தடுத்து அதிரடி இசையால் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் இசையமைப்பாளர் அனிருத். அவர் கொடுத்த லேட்டஸ் ஹிட்ஸ் பற்றிய காட்சி தொகுப்பை பார்க்கலாம்

கடந்த ஆண்டு தனுஷுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தை கொடுத்த அனிருத், அதன்பிறகு ஒரு நீண்ட கேப் எடுத்துக்கொண்டார்.

ஜெயிலர், இந்தியன் 2, லியோ, விடா முயற்சி, தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் படம் என பெரிய படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமானாலும், அவரது இசையை கொண்டாடும் வகையில் ஆல்பம் வெளியாகவில்லை.

ஆனால் இந்த காத்திருப்புக்கு தீனி போடும் விதமாக அமைந்துள்ளது சமீபத்திய நாட்கள்..

விஜய் பிறந்தநாளன்று ரீ-என்ட்ரீ கொடுத்த அனிருத், நா ரெடி என மாஸ் பாடலை வெளியிட்டு ரசிகர்களை துள்ளவைத்தார்.

கடந்த 6ஆம் தேதி வெளியான ஜெயிலர் படத்தின் காவாலா பாடல், இப்போதும், இந்திய அளவில் டிரெண்டிங்...

பாலிவுட் உச்ச நட்சத்திரமான ஷாருக்கானின் ஜவான் பட டிரெய்லரிலும் அனிருத் இசை ரசிகர்களை கவர்ந்தது.

தற்போது ரஜினிக்கு ஹுக்கும் என்ற மாஸ் பாடலை புதுவரவாக கொடுத்துள்ளார் அனிருத்...

இப்படி ஒரு மாதத்திற்குள் அடுத்தடுத்து கலக்கல் ஹிட்ஸை கொடுத்து இணையத்தை ஆக்கிரமித்துள்ளது ராக்ஸ்டார் அனிருத்தின் பெயர்....


Next Story

மேலும் செய்திகள்