இசை கச்சேரி நடத்திய கலக்கல் ரோபோ... அரங்கமே கை தட்டுற அளவுக்கு ஒரு வேலை

x

நம்மளோட டெக்னாலஜி உலகத்துல... ரோபோட்களோட வடிவமைப்பு பல புரட்சிகளை உண்டாக்கிடுச்சுனே சொல்லலாம்...

குறிப்பா... சண்டை போடுற ரோபோ, சமைக்குற ரோபோ, மணிதர்களோட பேசுற ரோபோனு... இப்படி அந்த புரட்சி பட்டியல் ரொம்பவே நீளமானது.

இப்போ அந்த வரிசைல... இசை கச்சேரி நடத்துற ரோபோவ உருவாக்கிருகாங்க... நம்ம சவுத் கொரியாகாரங்க...

ஒரு பொய்யாவது சொல் கண்ணே... ( பாடிகிட்டே படிக்கவும் ) கங்கை அமரன் எப்படி... இசைல மெய் மறந்து எப்டி அந்த ஆர்ஸ்கட்ராவ நடத்துவாரோ அதே மாதிரி... இந்த ரோபோ... கைய அசைச்சு இசை ஞானத்தோட... பிரம்மாண்ட இசை கச்சேரிய சக்சஸ்ஃபுல்லா நடத்தி காட்டிருக்கு...

சவுத் கொரியாகாரங்க உருவாக்குன இந்த ரோபோவ... இசை மேடைலயே வச்சு செக் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்காங்க...

நாம என்னமோ டம்மி ரோபோவா இருக்கும்னு நெனச்சோம்... ஆனா அந்த எண்ணத்த தவிடு பொடி ஆக்கி... அம்புட்டு பேர் காதுக்கும் இசை விருந்து குடுத்து... அப்லாஸ்ஸ... அள்ளிருச்சு இந்த மியூசிக் ரோபோ.


Next Story

மேலும் செய்திகள்