அரசு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் வருகையை ஒட்டி முழு வீச்சில் சீரமைக்கப்படும் சாலைகள்

x

நாளை கோவை செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24ம் தேதி ஈச்சனாரி ரத்தினம் கல்லூரி பின்புறம் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அதில் ஒரு லட்சத்து ஆறாயிரம் பேருக்கு நல உதவிகளை வழங்குகிறார். நிகழ்வில் பார்வையாளர்கள் மற்றும் பயனாளிகள் அமர்வதற்கான பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. மாநகருக்கு முதலமைச்சர் வருவதன் காரணமாக உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலை வரை தேங்கி கிடந்த மண் அகற்றப்பட்டு, சாலையில் கருப்பு, வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் உள்ள சாலைகள் சீரமைத்து, மைய தடுப்பு சுவர்களுக்கு வர்ணம் பூச்சும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்